வணிகர்களுக்கு தடுப்பூசி முகாம்

தர்மபுரி, ஏப்.15: தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் தடுப்பூசி திருவிழா, வர்த்தகர் மஹாலில் நேற்று நடந்தது. மாவட்ட அனைத்து வணிகர் சங்கத்தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். கலெக்டர் கார்த்திகா முகாமை தொடங்கி வைத்தார். வணிகர்கள், சிறுவியாபாரிகள் என 500பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மற்றொரு முகாம் இதே இடத்தில் விரைவில் நடத்தப்படும் என்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சப் கலெக்டர் பிரதாப், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, டாக்டர் இளங்கோவன் மற்றும் வர்த்தகர் சங்கத்தலைவர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>