சென்னையில் பெயர் பலகை அழிப்பு போராட்டம்

கோவை, ஏப். 14: தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 1979-ம் ஆண்டு, அன்றைய முதல்வர் எம்ஜிஆர், சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையை தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா நினைவாக,  பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அந்த பெயரை மாற்றி, தற்போது ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று நெடுஞ்சாலை துறை சார்பில் பெயர் பலகை வைத்துள்ளனர். இதற்கான உத்தரவை தமழக அரசு பிறப்பித்துள்ளது. எம்ஜிஆர் பெயரில் ஆளுகின்ற அதிமுக அரசில், பெரியார் பெயரை நீக்குகிற செயல் நடந்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மீண்டும் பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை என பெயர் பலகை வைக்கவேண்டும். இல்லையேல், ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரன்க் ரோடு’’ என்ற பெயரை தார் பூசி அழிக்கிற போராட்டம் வரும் 16-ம் தேதி (வெள்ளி) நடைபெறும். இதில், தபெதிக தொண்டர்கள் பெரும் திரளாக பங்கேற்பார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>