காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.14: பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில், இன்று அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாப்பட உள்ளது.இதையொட்டி விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து போலீசார் ஆலோசனை நடத்தினர். சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாகி வருகிறது.எனவே சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசங்களை அணியவும் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.எனவே சமூக இடைவெளியை அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர்.

Related Stories:

>