பொதுமக்கள் அவதி காரிமங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

காரிமங்கலம், ஏப்.13:காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான ஊராட்சிகளில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரியாம்பட்டி, கோவிலூர், அடிலம், மொட்டலூர், பந்தாரஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தென்பெண்ணை ஆற்று குடிநீரும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே,  பல்வேறு ஊராட்சிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. கடந்த சில மாதங்களாக, குறைந்த அளவு குடிநீரே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மலை கிராமங்களை உள்ளடக்கிய ஜிட்டாண்டஅள்ளி, பிக்கனஅள்ளி ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படாததால், மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, அனைத்து ஊராட்சிகளிலும், சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: