நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் கொட்டிய மருத்துவ கழிவுகளை எரித்த வனத்துறையினர்

நல்லம்பள்ளி, ஏப்.13: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வனப்பகுதியாக நல்லம்பள்ளி, முத்தம்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையாக உள்ளது. இந்த வழியாக சென்ற மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை, வனப்பகுதி சாலையோரத்தில் மூட்டையாக கட்டி வீசி சென்றுள்ளனர்.இதை குரங்குகள் உணவு என நினைத்து மூட்டை அவிழ்த்த போது அதில் ஊசி, சிரஞ்சி போன்றவை இருந்தது தெரிய வந்தது. இதை அந்த வழியாக ெசன்றவர்கள், படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தியும் வெளியானது. இதன் எதிரொலியாக, வனத்துறையினர் ேநற்று சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கொட்டப்பட்டிருந்த ஊசி, சிரஞ்ச் போன்றவற்றை தீ வைத்து எரித்தனர்.   

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதி சாலை வழியாக தினசரி 500க்கும் மேற்பட்ட மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அவர்களில் சிலர், வீடுகள், வணிக வளாகங்களில் சேகரமாகும் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவு, மருத்துவ கழிவு போன்றவற்றை, வனப்பகுதி சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர்.இதனால் வன விலங்குகளுக்கு பாதிப்பும் மற்றும் தொற்று நோய் ஏற்படு உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. இது ேபான்று மருத்துவ கழிவு, கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் கொட்டினால், வனப்பாதுகாப்பு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Related Stories: