மஞ்சள் மதிப்புக்கூட்டு பயிற்சி

தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி ரெட்டியூர் கிராமத்தில், மஞ்சள் மதிப்புக்கூட்டு பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், கிராம விவசாயிகள், பொதுமக்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள் ஹரி, பாலாஜி, விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னோடி விவசாயி சின்னசாமி தனது வயலில் அறுவடை செய்த மஞ்சள் கிழங்குகளை காய வைத்து, தனது சொந்த மஞ்சள் பாலிஸ் போடும் இயந்திரம் மூலம் தனது மஞ்சள் கிழங்குகளை மதிப்புக்கூட்டியதை செயல்விளக்கம் செய்து காண்பித்தார். விவசாயி கூறுகையில், ‘மதிப்புக்கூட்டுதல் செய்யும் போது, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் மஞ்சள் கிழங்குகளை ₹125 வரை விற்பனை செய்ய முடியும்,’ என்றனர்.

Related Stories: