கொரோனா பரவல் அதிகரிப்பால் விளையாட்டு மைதானத்தில் கட்டுப்பாடு

தர்மபுரி, ஏப்.12: கொரோனா பரவல் அதிகரிப்பால், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை பரவல் தீவிரமாகி வருகிறது. இதையொட்டி கடந்த 10ம் தேதி முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு தினமும் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் விளையாடவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் வந்து செல்கின்றனர். தற்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குள் விளையாடவோ அல்லது நடை பயிற்சி போகவோ உள்ளே நுழைபவர்கள் அனைவரும், உரிய மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். யாரும் பெஞ்சுகளில் அமரக்கூடாது என புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மட்டுமே வீரர்கள் பொதுமக்கள் மைதானத்திற்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.

Related Stories: