பாலக்கோடு அருகே பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி

தர்மபுரி, ஏப்.9: பாலக்கோடு அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த கண்காட்சி நேற்று நடந்தது. இதில், சீரக சம்பா, பூங்கார், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம், இலுப்பை பூ சம்பா, அறுபதாம் குறுவை, திருநெல்வேலி கிச்சடி, தங்க சம்பா, குழியடிச்சான், மடுமுழுங்கி, வாசனை சீரகசம்பா, வலனம் சன்னம், பாசுமதி, மிளகு சம்பா, முற்றனம் சன்னம், சின்ன கிச்சடி, குள்ளக்கார், கிச்சடி சம்பா, தூயமல்லி, பாவனி, சவுலு சம்பா, ஆத்தூர் கிச்சடி, சிவப்பு கவுனி, நகாட்டார் சம்பா, சொர்ணமசூரி, சொர்ணமயூரி ஆகிய நெல் ரகங்களை காட்சிப்படுத்தி, விவசாயிகளுக்கு அதன் முக்கியத்துவத்தையும், பயன்கள் குறித்தும், ஓசூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். ஓசூர் அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஊரக அனுபவ பயிற்சியின் ஒருபகுதியாக இதை நடத்தினர். பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தி சுற்றுப்புற வளத்தை காத்து, விவசாயத்தில் அதிக லாபம் பெறும் வழிகளை தெளிவாக விளக்கினர். கண்காட்சியில் கிராம பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

Related Stories: