வாங்கல் அரசு சாலையில் இருந்து வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் வரை புறவழிச்சாலை அமைக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

கரூர், மார்ச் 31:  கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். கடந்த 15ம்தேதி அன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று கரூர் நகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் அனைத்து கிராஸ் பகுதிகள், பாரதி நகர், விஜய் நகர் மெயின்ரோடு, கேவிபி நகர், கணேசா நகர், பெரியார் நகர் மெயின்ரோடு, காமராஜபுரம் மெயின்ரோடு, செங்குந்தபுரம் கிராஸ் பகுதிகள், முத்துநகர் என காலை 7மணி முதல் மதியம் 1.30மணி வரை 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 4.30மணி முதல் இரவு 9.40மணி வரை நெரூர் வடபாகம் ஊராட்சி பகுதிகளான முனியப்பனூர் கடைவீதி, மல்லம்பாளையம், சேனைப்பாடி, பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம், மாவிலன் தெரு, நெரூர், ஒத்தக்கடை வடக்கு, ஒத்தக்கடை காலனி என 15க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டு மக்களிடையே பேசியதாவது: வாங்கல் அரசு சாலையில் இருந்து வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் வரை புறவழிச்சாலை அமைக்கப்படும். சுக்காலியூர் முதல் விஸ்வநாதபுரி பிரிவு வரை புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றார்.

Related Stories: