கரூர் பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

கரூர், மார்ச். 29: கரூர் பசுபதீஸ்வரா–்கோயில் பங்குனி பெருந்திருவிழாவினை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பங்குனி விழாவினை முன்னிட்டு கடந்த 19ம்தேதி அன்று காலை 10.30மணிக்கு மேல் துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் 26ம்தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது. கோயிலை சுற்றிலும் வலம் வந்த தேரினை பக்தர்கள் இழுத்து சுவாமி தரிசனம் செய்னர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த பங்குனி விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: