ஒகேனக்கல்லில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

தர்மபுரி, மார்ச் 29: ஒகேனக்கலில் 100சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கலைநிகழ்ச்சி, சுற்றுலா பயணிகளுக்கு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினர் கோலப்போட்டி, மனித சங்கிலி, கிராமிய கலைநிகழ்ச்சிகள், நடைபயணம், துண்டுபிரசுரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று ஒகேனக்கலில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிளாஸ் மேப் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி, சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மேலம், மாதிரி வாக்குசாவடி மையம் அமைத்தல், நல்லான்பட்டி பயிற்சி மைய 20 மாணவர்கள் சிலம்பு, உடற்பயிற்சி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மனித சங்கிலி போன்ற விழிப்புணர்வு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கார்த்திகா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் எந்தி சென்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கோலப்போட்டிகள் நடந்தது. தேர்தல் நாளான ஏப்ரல் 6ம் தேதியை குறிக்கும் வகையிலான ராட்சத பலூனை, தேர்தல் அலுவலர் கார்த்திகா பறக்க விட்டார். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசசேகர், தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகாசலம், தாசில்தார் பாலமுருகன், பிஆர்ஓ பாரதிதாசன், பென்னாகரம் பிடிஓக்கள் ரேகா, ஆனந்தம் மகளிர் திட்ட அலுவலர் காமராஜ் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: