கடத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

கடத்தூர், மார்ச் 16:  கடத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையை முடுக்கி விட்டுள்ளனர். ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தொகுதிகள் தோறும் கால்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அடங்கிய பறக்கும் படையை அமைத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடத்தூரில், பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் முகாமிட்டு வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி முழு அளவில் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். நேற்றைய சோதனையில் பணம் மற்றும் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இனி வரும் நாட்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்படும் என பறக்கும்படையினர் தெரிவித்தனர்.

Related Stories: