வணிகர்களின் நலனுக்காக மெய்நிகர் முறையில் நேர்காணல்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் நேற்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில் அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பேசுகையில், ‘‘வணிகர்களின் நலனுக்காக மெய்நிகர் முறையில் நேர்காணல் மேற்கொள்ள வழிகாட்டு குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சில காரணங்களால் நேரில் ஆஜராக முடியாக வணிகர்கள், தொலைதூர பகுதிகளில் உள்ள வணிகரும் உரிய காலக்கட்டத்தில் விசாரணையில் பங்குபெற ஒரு வாய்ப்பாக அமையும். மெய்நிகர் முறையானது 15 மேல்முறையீட்டு அலுவலகங்களிலும் இன்று (9ம் தேதி) முதல் செயல்பாட்டில் வரவுள்ளது’’ என்றார். கூட்டத்தில் வணிகவரி துறை செயலாளர் குமரகுருபரன், ஆணையர் நாகராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: