27,000 நெல் மூட்டைகள் தீயில் எரிந்து நாசம்

கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஐந்தாங்கட்டளையில் திறந்த வெளியில் அரசு நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 15 ஏக்கர் பரப்பளவில் சுமார் 6 லட்சம் நெல் மூட்டைகள் தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த 7ம்தேதி காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணி விடிய விடிய நடந்தது. சுமார் 30 மணி நேரம் போராடி நேற்று மாலை தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3.50 கோடி ஆகும்.

Related Stories: