திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விதிக்கப்பட்ட சுரங்கங்களுக்கான தடை தொடரும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனிம மணல் எடுக்க 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு தடை விதித்தது. இருப்பினும் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கனிமங்களை வெட்டி எடுத்தல், பதுக்குதல் மற்றும் கடத்துதல் ஆகியவை சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பல தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக எழுந்த தொடர் புகாரின் அடிப்படையில், இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றி அமைத்து கடந்த 2025ம் ஆண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதேப்போன்று அரசுக்கு ஏற்பட்ட பெருத்த இழப்பீடான ரூ.5,832 கோடியை தனியார் நிறுவனங்களிடம் வசூலிக்கவும் மற்றும் அவர்களது இருப்புக்களை பறிமுதல் செய்ய வேண்டும். குறிப்பாக சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் திருட்டு தொடர்பான புகார்களை கனிம வளத்துறை மற்றும் புவியியல் துறை அல்லது மாவட்ட காவல்துறைக்கு உடனடியாகத் தெரிவிக்கலாம் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மேற்கண்ட வழக்கில் சட்ட விரோத சுரங்கள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

சுரங்கள் விவகாரத்தில் முன்னதாக இடைநிறுத்தப்பட்ட குத்தகை தடை என்பது தொடரும். இதில் பிரச்சனைகள், உன்மை அம்சங்கள் ஆகியவை அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தான் உயர்நீதிமன்றம் விரிவான உத்தரவை பிற்பபித்துள்ளது. மேலும் தனி நீதிபதியின் முந்தைய உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

குறிப்பாக அரசியலமைப்பின் 136வது சட்ட விதிகளின் அடிப்படையில் அதிகார வரம்பை பயன்படுத்தும் எந்தவொரு பிழையையும் நாங்கள் இந்த வழக்கில் காணவில்லை. எனவே இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதேப்போன்று இதே கோரிக்கையோடு மனுக்கள் ஏதேனும் நிலுவையில் இருப்பின் அதுவும் முடித்து வைக்கப்படுகிறது’’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: