முதல்வர் விழாவுக்கு மேடை அமைக்கும்போது இரும்பு ராடு விழுந்ததில் 5 பேர் உயிர் தப்பினர்

கரூர்: கரூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் விழாவில் இரும்பு ராடு விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கரூரில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (10ம்தேதி) நடைபெறுகிறது. இதற்காக கரூர், வெண்ணைமலை அடுத்த அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று பந்தல் அமைக்கும் பணியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக பெரிய பெரிய இரும்பு ராடுகள் தூக்கி நிறுத்துவதற்கு பெரிய கிரேன்கள் பயன்படுத்தப்பட்டது. அப்போது இரும்பு ராடுகளை தூக்கி நிறுத்திய போது எதிர்பாராத விதமாக மேலே இருந்த தொழிலாளர்களிடமிருந்து ராடு கை நழுவி கீழே சரிந்து விழுந்தது. இதனை பார்த்து சுதாரித்த 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி தப்பினர்.

Related Stories: