தமிழகத்தில் இன்று முதல் ஆரோக்கியா பால் லிட்டருக்கு ரூ.3 உயர்வு: பிற நிறுவனங்களும் விலையை உயர்த்த முடிவு

சென்னை: ஆரோக்கியா பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற தனியார் நிறுவனங்களும் விலையை உயர்த்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் மற்றும் தயிர் விற்பனை விலையை இன்று முதல் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனியார் பால் விலையில் உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் 500 மி.லி. பால் ரூ.2, ஒரு லிட்டருக்கு ரூ.3 வரை விலையை உயர்த்தியுள்ளது.  அதன்படி, 500 மி.லி. சமன்படுத்தப்பட்ட பால் ரூ.29லிருந்து ரூ.31, 500 மி.லி. நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35லிருந்து ரூ.37, 500 மி.லி. கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.39லிருந்து ரூ.41, ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.54லிருந்து ரூ.57, ஒரு லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66லிருந்து ரூ.69, ஒரு லிட்டர் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.73லிருந்து ரூ.76 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 500 கிராம் ஹட்சன் தயிர் ரூ.42லிருந்து ரூ.44, 500 கிராம் ஆரோக்யா தயிர் ரூ.40லிருந்து ரூ.42 என்ற புதிய விலைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதேபோல் சில வகை பால் பாக்கெட்டுகளுக்கான விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மார்ஜினும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்யா நிறுவனத்தைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் பிற தனியார் பால் நிறுவனங்களும் விரைவில் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories: