கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பரிதாப பலி

சிவகிரி: விருதுநகர் மாவட்டம், சேத்தூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (51). இவரது மகள் பிரியதர்ஷினியின் பிறந்த நாளை நேற்று வீட்டில் விமரிசையாக கொண்டாட நேற்று முன்தினம் நள்ளிரவில் சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து வருவதற்காக வேலுச்சாமி தனது வீட்டில் இருந்து அருகேயுள்ள சிவகிரி நோக்கி தனது காரில் புறப்பட்டார். அவருடன் பேத்தி கீர்த்தி (10), பேரன் ஹரி கைலாஷ் (7) மற்றும் ராணுவ வீரர் வசந்த் (23), முனியாண்டி (40) ஆகியோரும் பயணித்தனர்.

காரை வேலுச்சாமி ஓட்டினார். தென்காசி – மதுரை சாலையில் சிவகிரி சோதனை சாவடி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வேலுசாமியின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், சாலையோர மரத்தின் மீது மோதி அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் வேலுச்சாமி, ஹரி கைலாஷ், கீர்த்தி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். முனியாண்டி, வசந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

Related Stories: