‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் ஊராட்சிகளை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத் தொகையும் அதனுடன், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

இதன் அடிப்படையில் 2026-27ம் ஆண்டிற்கான ‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31.7.2026க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: