சென்னை: ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த முஸ்லிம்களிடம் இருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு ஹஜ் விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது.
இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.6.2026 முதல் 20.7.2026 (இரவு 11.59 வரை) முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்ப படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
