க்யூட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஐந்து முக்கியப் பாடங்களில் தேசிய அளவில் 20 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 22 மாணவர்கள், 3 பாடங்களில் 100 பர்சண்டைல் பெற்றுள்ளனர். 180 பேர் இரண்டு பாடங்களிலும் 3,214 பேர் ஒரு பாடத்திலும் 100 பர்சண்டைல் பெற்றுள்ளனர்.

இந்த டாப் 20 சாதனையாளர்கள் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும். தேர்வெழுதிய மாணவர்கள் என்டிஏ இணையதள பக்கத்திற்கு சென்று தங்கள் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்.

Related Stories: