காரிமங்கலம் சந்தையில் தேங்காய் விற்பனை

ஜோர்காரிமங்கலம், மார்ச் 9:  காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. அதற்காக திங்கட்கிழமை மதியத்தில் இருந்து தேங்காய் விற்பனை நடப்பது வழக்கம். நேற்று அரசம்பட்டி, பாரூர், நாகரசம்பட்டி, பண்ணந்தூர், புலியூர் ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் கொண்டு வரப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர், பத்ராவதி ஆகிய பகுதியில் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தரத்திற்கு ஏற்ப ஒரு காய் ₹8 முதல் ₹23 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ₹1.80 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது. முகூர்த்த நாள் மற்றும் பண்டிகை நாட்கள் என்பதால் தேங்காய் விலை மற்றும் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories:

>