பெண்ணை எரித்துக்கொன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை

தர்மபுரி, மார்ச் 8: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மாதேமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி(45). பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி நீலா, 2வது மனைவி ரத்தினம், 3வது மனைவி சவுமியா(24). இவர்களில் 2வது மனைவி ரத்தினத்தை பழனி, பெங்களூருக்கு தன்னுடன் அழைத்துச்சென்றுவிட்டார். நீலா, சவுமியா ஆகியோர் மாதேமங்கலம் பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சவுமியாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருக்கும்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் வேலுசாமி (25). கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் வேலுசாமிக்கும், சவுமியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் வீட்டில் சவுமியா தனியாக இருந்தபோது அங்கு வந்த வேலுசாமி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சவுமியா வேலுசாமியை வெளியே போகுமாறு கூறினார். தொடர்ந்து வேலுசாமி பாலியல் தொல்லை கொடுத்ததால், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு என்னை ெநருங்கினால் தீ வைத்து விடுவேன் என மிரட்டினார்.

அப்போது, வேலுசாமி சவுமியா மீது தீ வைத்து விட்டு தப்பி ஓட முயன்றார். உடனே உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் சவுமியா, வேலுசாமியை கட்டிப்பிடித்தார். இதில் அவர் மீதும் தீ பரவியது. இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சவுமியா உயிரிழந்தார். இதையடுத்து அதியமான்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த வேலுசாமிக்கு நேற்று 2வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>