வீட்டில் தூங்கிய சிறுமிக்கு வாலிபர் பாலியல் தொல்லை

ஆற்காடு: ஆற்காடு அருகே வீட்டில் தூங்கிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ் மின்னல் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஆற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், சிறுமி கதவை திறந்து வைத்துவிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ்(43) என்பவர், நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே ராஜேஷ் இருட்டில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பெற்றோர் புகாரின்படி ரத்தினகிரி போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து நேற்று ராஜேஷை கைது செய்தனர்.

Related Stories: