போலி பத்திர எழுத்தர்களால் மக்கள் அவதி

சூலூர், மார்ச் 4: சொத்து தொடர்பான பத்திரங்களில் கிரையம், அடமானம், தான செட்டில்மென்ட் மற்றும் பவர் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை தயாரிப்பது, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்வது போன்ற பணிகளை செய்ய அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பத்திர எழுத்தர்கள் உள்ளனர். அவர்கள் தயார் ெசய்யும் பத்திரங்களே பதிவு அலுவலகத்தில் அலுவலர்கள் பதிவுக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என அரசு வரைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால், அரசு அங்கீகாரம் பெறாத புரோக்கர்கள் பலர் பத்திர எழுத்தர்கள் எனக் கூறிக் கொண்டு  சூலூரில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தங்களுக்கு சாதகமான ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலியான பெயர்களில் பத்திரங்களை தயார் செய்து சூலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வருவதாக அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவர்களை புதிதாக வந்துள்ள சூலூர் சார் பதிவாளர்கள் ஊக்கம்படுத்தி வருவதாக குற்றம்சாட்டும் பத்திர எழுத்தர்கள், சென்னையில் இருக்கும் ஒருவரின் பெயரில் போலியாக கையொப்பமிட்டு பத்திரம் தயாரித்து சூலூரில் பதிவு செய்கின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் பதிவுத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என புகார் கூறுகின்றனர்.

மேலும், சூலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இது குறித்து பதிவுத்துறைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பத்திர பதிவு எழுத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: