இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கோவை, மார்ச்.4: கோவை கடைவீதி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் பீளமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் உக்கடம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஆர்.எஸ். புரம் கிரைம் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் ரேஸ்கோர்ஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். நீலகிரி மாவட்ட இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் செல்வபுரம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிங்காநல்லூர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாநகரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரோஜா வெறைட்டிஹால் ரோடு இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாநகர இன்ஸ்பெக்டர் விஜயா உக்கடம் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாநகர இன்ஸ்பெக்டர் இந்திரா காட்டூர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா சாயிபாபா காலனி இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்த சுஜாதா ராமநாதபுரம் கிரைம் இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சேலம் சரக இன்ஸ்பெக்டர் சாந்தம்மாள் செல்வபுரம் இன்ஸ்பெக்டராகவும், தர்மபுரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தா குனியமுத்தூர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், நீலகிரி தேவாலா இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை கோவை போக்குவரத்து புலனாய்வு (மேற்கு) பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டனர். திருப்பூர் நகர இன்ஸ்பெக்டர் பதருன்னிசா பேகம் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் கோவை மாநகரக்கும், திருப்பூர் புறநகர இன்ஸ்பெக்டர் மீனா குமாரி கோவை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும்,

சேலம் நகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு கோவை மாநகர் சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நீலகிரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கோவை மாநகருக்கும், நாமக்கல் மாவட்ட நாமகிரி பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ கோவை கடைவீதி சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சாயிபாபா காலனி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரலேகா கோவை மாநகர நுண்ணறிவு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி சாயிபாபா காலனி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரோசலின் கோவை ஆர்.எஸ்.புரம் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>