நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் அலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தங்கமணி வரவேற்றார். கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ பேசுகையில், தர்மபுரி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர வைக்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், தலைவர் நிற்பதாக நினைத்து அனைவரும் கட்சி பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்பாக இருந்து கண்காணிக்க வேண்டும். தில்லுமுல்லு நடப்பதை தடுத்து, திமுக வெற்றிக்காக பாடுபட வேண்டும்,’ என்றார்.

Related Stories:

>