தொகுதி வாரியாக செயல்விளக்கம் 100 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

தர்மபுரி, மார்ச் 3: தர்மபுரியில், அரசியல் கட்சியினர் முன்னிலையில், 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்களில் இருந்து செயல்விளக்கம் மற்றும் பயிற்சிக்காக எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகா நேற்று பார்வையிட்டார். பின்னர், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக கீரை விஸ்வநாதன், அதிமுக அசோக்குமார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கார்த்திகா கூறுகையில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு, தலா 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் இயந்திரம் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. மொத்தம் 100வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவிக்கும் வி.வி.பேட் இயந்திரம் ஆகியவை செயல்முறை விளக்கம் அளிக்கவும், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: