சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் பிரசார கூட்டம் நடத்த 41 இடங்கள் அறிவிப்பு

தர்மபுரி, மார்ச் 3: தர்மபுரி மாவட்டத்தில், சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்ட, 41 இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) என 5சட்ட மன்றத்தொகுதிகள் உள்ளன. இவற்றில் தொகுதி வாரியாக அரசியல் கட்சிகள் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதிக்கப்பட்டுள்ள, 41 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலக்கோடு தொகுதியில், காரிமங்கலம் ராமசாமி கோயில், மொரப்பூர் சாலை, காரிமங்கலம் பேருந்து நிறுத்தம், மாட்லாம்பட்டி, காரிமங்கலம் பேகாரஅள்ளி சாலை, பெரியாம்பட்டி, அனுமந்தபுரம் பேருந்து நிறுத்தம், பாலக்கோடு பேருந்து நிலையம், மாரண்டஅள்ளி பேருந்து நிலையம், மாரண்டஅள்ளி- வெள்ளிச்சந்தை கூட்டுச் சாலை, மகேந்திரமங்கலம் பழைய காவல் நிலையம் பின்புறம், பஞ்சப்பள்ளி பேருந்து நிலையம்.

பென்னாகரம் தொகுதியில், புலிகரை பேருந்து நிறுத்தம், பென்னாகரம் பேருந்து நிலையம், சந்தை மைதானம், ஏரியூர், நெருப்பூர் பேருந்து நிறுத்தம், ஏரியூர் செல்லமுடி மாரியம்மன் கோயில், சின்னம்பள்ளி பேருந்து நிறுத்தம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையம். தர்மபுரி தொகுதியில், தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் பொதுப்பணித் துறை மைதானம், வள்ளலார் மைதானம், குமாரசாமிபேட்டை கிருபானந்த வாரியார் திடல், சந்தைப்பேட்டை, வேல் பால் டிப்போ அருகே மைதானம், நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம், தொப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம், வெள்ளக்கல் சமத்துவபுரம், பாளையம்புதூர், இண்டூர் பாலாஜி அரிசி ஆலை அருகே.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், சோலைக்கொட்டாய் பேருந்து நிறுத்தம், கிருஷ்ணாபுரம் சந்தை மைதானம், பாப்பிரெட்டிப்பட்டி ஜீவா திடல், தென்கரைக்கோட்டை பாத்திமா நகர், பொம்மிடி பேருந்து நிலையம், கடத்தூர் நகர், அ.பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம். அரூர் தொகுதியில், திப்பம்பட்டி சந்தைப்பேட்டை, கம்பைநல்லூர் சந்தைப் பேட்டை, மொரப்பூர் -பேருந்து நிலையம், கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு, அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, கோட்டப்பட்டி பேருந்து நிலையம், நரிப்பள்ளி பேருந்து நிலையம், தீர்த்தமலை பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரசார கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>