அரூர் பகுதியில் குண்டுமல்லி விலை சரிவு

அரூர், மார்ச் 3: அரூர் பகுதியில் கீழ்செங்கப்பாடி, குரும்பட்டி, பாரிவனம், ஆண்டியூர், வீரப்பநாய்க்கன்பட்டி, தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் சுபமுகூர்த்த தினங்கள் இல்லாததாலும், கோடை காலம் என்பதால் விளைச்சல் குறைந்தால் பூக்கள் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூ ₹1000க்கு விற்பனை செய்யப்பட்டது.  தற்போது விலை குறைந்து கிலோ ₹600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் 100 கிராம் ₹70 முதல் ₹75வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்ததையடுத்து, மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து வியாபாரி கூறுகையில், கடந்த வாரம் வரத்து குறைவான அளவிலேயே இருந்தது.ஆனால் திருமணம், பண்டிகை சீசன் என்பதால் விலை உயர்ந்தது. தற்போது முகூர்த்தம் இல்லாததால், இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

Related Stories:

>