லாரி மோதி பெண் சாவு

கோவை, மார்ச் 3:  கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (60). கயிறு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது மகன் முத்துமாணிக்கம் என்பவருடன் பைக்கில் உக்கடத்திற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக் அவ்வழியாக சென்ற லாரி மீது உரசியது. இதில் பைக்கில் இருந்து முத்து மாணிக்கம் மற்றும் பத்மாவதி ஆகியோர் தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய  பத்மாவதி உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். முத்து மாணிக்கம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மகன் கண் முன் உடல் நசுங்கி தாய் இறந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பதறி போனார்கள். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>