துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

கோைவ, மார்ச் 2: கோவை மாவட்டத்தில் சட்டமன்ற ேதர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. இதில் கண்ணப்ப நகர் போலீஸ் ெசக்போஸ்டில் இருந்து புதுப்பாலம் வரையிலும், ரத்தினபுரி 6 முக்கு பகுதியில் இருந்து ராதாகிருஷ்ணன் ரோடு வரையிலும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படை) இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். இதில் நூற்றுக்கணக்கான போலீசார் பங்கேற்றனர். கோவை நகரில் 15 போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேர்தலுக்காக கொடி அணிவகுப்பு நடத்தப்படும். தேர்தலை அமைதியாக, முறையாக, மக்களுக்கு பாதுகாப்பாக, எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்தும் வகையில் உறுதி ஏற்கும் வகையில் இந்த அடையாள அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

>