தி.மு.க. பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கோவை, மார்ச் 2:  கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கோவை வடக்கு  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமை தாங்கினார். பகுதிக்கழக பொறுப்பாளர்கள் கே.எம்.ரவி,  வடவள்ளி சண்முகசுந்தரம், கணபதி லோகு, ஏ.எம்.கிருஷ்ணராஜூ, அஞ்சுகம்  பழனியப்பன், பரணி கே.பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது, மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர வைப்பதற்காக, வீதி வீதியாக களமிறங்கி, தேர்தல் பணியாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நந்தகுமார், பி.வி.சுப்பிரமணியம்,  சங்கனூர் ஆனந்தகுமார், எஸ்.ஜி.சுரேஷ், ஆர்.ஆர்.மோகன்குமார், தமிழ்மறை, அருள்குமார்,  ராமமூர்த்தி, சரஸ்வதி, ஹரீஷ், சுரேஷ், வைரமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>