பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

தர்மபுரி, மார்ச் 2: தர்மபுரி மாவட்ட பொக்லைன் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி, உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 100க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி, வரும் 4ம் தேதி வரை போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர்கள் கூறுகையில், ‘மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்களும், தர்மபுரி தாலுகாவில் 150க்கும் மேற்பட்ட பொக்லைன்கள் உள்ளன. டீசல் உயர்வை சமாளிக்க, நாங்களும் வாடகையை உயர்த்தி உள்ளோம். மினிமம்  ஒரு மணி நேரத்திற்கு ₹1100ம், 2 மணி நேரத்திற்கு ₹2500ம் 1ம் தேதி முதல் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். டிரைவர் பேட்டா ₹300ம் வசூலிக்க உள்ளோம்,’ என்றனர்.

Related Stories:

>