அரசு பள்ளி மாணவர்களிடையே காட்சிப்படுத்துதல் போட்டி

தர்மபுரி, மார்ச் 2: அரசு பள்ளி மாணவ- மாணவிகளிடையே மாவட்ட அளவில் காட்சிப்படுத்துதல் போட்டி தர்மபுரியில் நடந்தது. தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஸ்கோப் என்ற திட்டம், தர்மபுரி மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. தொடர்ந்து மாவட்ட அளவில் காட்சிப்படுத்துதல் போட்டி, தர்மபுரி டவுன் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள்(தர்மபுரி) பாலசுப்ரமணி, (அரூர்) பொன்முடி, (பாலக்கோடு) சண்முகவேல், அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன், பள்ளித்துணை ஆய்வர் இளமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் நத்தமேடு, வி.முத்தம்பட்டி, அவ்வையார் மகளிர், பாப்பிரெட்டிப்பட்டி ஆண்கள், அரூர் ஆண்கள், மாங்கரை, மாட்லாம்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, ஜாலிப்புதூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களை அரசு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Related Stories: