ஆன்லைன் வகுப்பு நடத்த 86 பேராசிரியர்களுக்கு ‘டேப்’

கிருஷ்ணகிரி, மார்ச் 2: கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் செல்போன் மூலமே, மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தனர். சிறிய அளவிலான செல்போனை பயன்படுத்தி பாடம் நடத்தும்போது, மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது. வேலூர் அக்சீலியம் கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் பணிபுரியும் 86 பேராசிரியர்கள், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, இக்கட்டான சூழ்நிலையில், தங்கள் செல்போனை பயன்படுத்தியே பாடம் நடத்தி வந்தனர்.

எனவே, பேராசிரியர்களின் 50 சதவீத பங்களிப்பு, ஐவிடிபி நிறுவனத்தின் 50 சதவீத பங்களிப்புடன் 86 பேராசிரியர்களுக்கும் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட தலா ₹21 ஆயிரம் மதிப்பிலான டேப்லெட்களை, ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘கல்லூரி மாணவிகளின் நலனை முன்னிட்டும், மாணவிகளின் கற்றல் திறன்கள் எவ்வகையிலும் தடைபடக்கூடாது என்ற நோக்கத்திலும், பேராசிரியர்களுக்கு டேப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தோம். இந்த திட்டத்திற்காக ₹10.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளது,’ என்றார்.  

Related Stories: