திருப்பூர் அருகே கள்ளக்காதலியின் மகளான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி தற்கொலை: விசாரணைக்கு பயந்து தூக்கில் தொங்கினார்

 

திருப்பூர்: திருப்பூர் அருகே கள்ளக்காதலியின் மகளான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (43). தொழிலாளியான இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை பிரிந்து 15 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது சக்திவேலுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

பெண்ணின் மகள் வீட்டில் இல்லாதபோது சக்திவேல் அங்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், சக்திவேல் வழக்கம் போல் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார். அப்போது, வீட்டில் கள்ளக்காதலியின் 15 வயது மகள் இருந்தார். அம்மா எங்கே என கேட்டுள்ளார். அம்மா வேலைக்கு சென்றுள்ளார் என சிறுமி கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சக்திவேல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

ஆபாச வீடியோவை காட்டி சிறுமியிடம் பாலியில் தொல்லை கொடுத்துள்ளார். வேலை முடிந்து சிறுமியின் அம்மா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் சிறுமி அழுதுகொண்டிருந்தார். சிறுமியிடம் ஏன் அழுகிறாய் என கேட்டுள்ளார். சிறுமி தனக்கு நேர்ந்ததை அழுதபடி கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், இது குறித்து குழந்தைகள் நல வாரியத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சக்திவேலிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அவருக்கு உத்தரவிட்டிருந்தனர். போலீஸ் விசாரணைக்கும், தண்டனைக்கும் பயந்த சக்திவேல், நேற்றுமுன்தினம் நள்ளிரவு கூத்தம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருமுருகன்பூண்டி போலீசார், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: