‘என்னை மீறி ஒருத்தன் இறங்கினா முடிச்சிடுவேன்’அறந்தாங்கி தவெக எம்எல்ஏ மிரட்டல் ஆடியோ வைரல்

 

புதுக்கோட்டை: ‘என்னை மீறி ஒருத்தன் இறங்கினா முடிச்சிடுவேன்’ என அறந்தாங்கி தவெக எம்எல்ஏ மிரட்டல் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட பர்வேஸ் 10,062 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வுக்கு முன்னதாக கட்சியில் உள்ள ஒரு நபரிடம் தவெக அறந்தாங்கி எம்எல்ஏ பர்வேஸ் பேசிய ஆடியோ தேர்தல் ரிசல்டுக்கு பின் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நபரிடம் பேசும் ஆடியோ உரையாடல் பின்வருமாறு: ஒன்னும் இல்ல பிரதர்… என்னை மீறி ஒருத்தன் வந்து ஊ கூட சொல்ல மாட்டான். அப்படி மீறி ஒருத்தன் இறங்கினா அவனை முடிச்சுடுவேன். அரசியலே அதுதான். நானே பல அரசியல் பண்ணியிருப்பேன். நான் எவ்வளவு பேர பார்த்திருப்பேன். எங்க தாத்தா, எங்க அப்பா நான் எல்லோரும் அரசியல்ல இருக்கோம்… நான் மூன்றாம் தலைமுறையா இருக்கேன்… திரட்டிங் பண்ணணும்னு நினைச்சட்டா நாங்க தான் எல்லாத்துக்கும் இறங்குவோம்.

அறந்தாங்கியில யாரையாவது போட்டா விடுவனா.. என்னை மீறி யாரையாவது போட முடியுமா. சொல்லுங்க. அறந்தாங்கி விடுங்க…. 6 தொகுதியிலும் எவனையாவது போட முடியுமா… இந்த சீட்டுக்கு பர்வேஸ் உடைய கையெழுத்து ஒப்புதல் இல்லாமல் கொடுக்க மாட்டாங்க. புரியுதா… எங்க போய் எங்க முட்டினாலும் இந்த 6 தொகுதிக்கும் நான் தான் சொல்லனும். புரியுதா…

முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் சேர்ந்தாரு. அவருக்கும் நான் தான் ரெக்கமெண்ட் பண்ணிருக்கேன். புரியுதா.. தலைவரை பார்த்துட்டு உன் தகுதிக்கு ரூ.10 கோடி சொன்ன கூட நல்லா இருக்கும். செங்கோட்டையன் மூலமா சேர்ந்தாலும் நான் தான் ரெக்கமெண்ட். அதனால சீட் விசயம்தான் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை என்கிட்ட வரனும். உங்களை ஈவினிங் கூப்பிடுறேன் வாங்க நேரில் சந்திப்போம்.. இவ்வாறு அந்த ஆடியோ உரையாடல் முடிகிறது.

Related Stories: