சென்னை: ஆளுநர் ஆட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களாட்சியை தான் ஏற்றுக்கொள்கிறோம் என்று வன்னிஅரசு கூறினார். சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: எங்கள் கட்சித் தலைவர் எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம். நேற்று உயர்நிலை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அவரின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம்.
ஆளுநர் ஆட்சி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களாட்சியை தான், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆளுநரின் செயல்பாடுகள் எல்லாம், எதிராக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரியான ஆளுநர் ஆட்சியை நாங்கள் ஆதரிப்பதில்லை. துணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி, உயர் பதவி போன்றவைகளை விசிக கேட்கிறதா என்பது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து எனக்கு தெரியவில்லை. திருமாவளவன் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
