தேர்தல் விதிமுறையையொட்டி எம்எல்ஏக்கள் ஆபிஸ் பூட்டி சீல் வைப்பு

தர்மபுரி, மார்ச் 1: தர்மபுரி மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தல் விதிமுறை எதிரொலியாக எம்எல்ஏக்கள் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, வரும் 12ம் தேதி சட்டமன்ற பொதுதேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் துவங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகம் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் தர்மபுரி அப்பாவு நகரில் உள்ள எம்பி அலுவலகத்திற்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Related Stories:

>