மண் பானை தயாரிப்பு தீவிரம்

அரூர், பிப்.26: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, காரிமங்கலம், அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண் பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரூர் அடுத்த கொங்கவேம்பு பகுதியில் சில குடும்பத்தினர் பரம்பரையாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெரிய அளவிலான மண் பானைகள், பானைகள், அடுப்பு, பூந்தொட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், தண்ணீர் வைத்து பயன்படுத்த கூடிய பானைகள் தயாரிப்பு அதிகரித்துள்ளது. மண் பானைகள் அளவை பொருத்து ₹200 முதல் ₹500 வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை மக்கள் விரும்பி வாங்கி செல்வதாக, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: