டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பிப்.26: தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க கோரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் தினகரன் வரவேற்றார். தொமுச மாவட்ட பொருளாளர் மயில் முருகன், பொருளாளர் மணி, சிஐடியூ மாவட்ட துணை பொது செயலாளர் ஜெயராமன், தொமுச மாவட்ட துணை செயாளர் முனுசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் அன்பரசு, ஆடலரசு, மகேந்திரன், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

தொமுச மாவட்ட கவுன்சில்  செயலாளர் அன்புமணி, சிஐடியூ மாநில செயலாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பாதுகாப்பான பணி நிலைமை சுழற்சிமுறை, விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், பாதுகாப்பற்ற கடைகள் மூட வேண்டும். பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறை போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: