கோரிக்கைகளை வலியுறுத்தி புலியூரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 24: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் புலியூரில் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புலியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பேரூராட்சி பகுதியில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தினமும் குறைந்தது ரூ. 406 வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>