என்.ஜி.பி. தொழில் நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கோவை, பிப்.24:கோவை மாவட்டம் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில் நுட்ப கல்லூரியில் நேற்று முன் தினம் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கவிஞர் கவிதாசன் கலந்து கொண்டார். கல்லூரியின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலாளர் டாக்டர் தவமணி டி.பழனிசாமி, கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் புவனேஷ்வரன், முதல்வர் முனைவர் பொற்குமரன் வாழ்த்துரை வழங்கினர்.  விழா ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் நந்தகுமார் தலைமையில் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தேசிய அளவில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை பெற்றனர். தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். காகித விளக்க காட்சி, ஹாகாதான், ஆன் போர்டு கண்டறிதல், ஈபிஸ், சைபர் ஹேக், கோட் ஒப்பீடு, சர்க்யூட்டோ டி எஸ் கட்டா, கிதுப், நெட்பீஸ்டா, டிராப்டிக்ஸ், கெலிடோஸ்கோப் போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: