வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பிப்.23: தர்மபுரி மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் 6வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்து பேசினார். இதில் அசோக்குமார், சிவன், ராஜிவ்காந்தி, அருண்பாண்டி, நரசிம்மன், நடராஜ் உள்ளிட்ட 60 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். இதில், வருவாய்துறை அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories:

>