சென்னை மாநகரில் தனது 5G சேவையை தொடங்கியுள்ளது VI நிறுவனம்

 

சென்னை: சென்னை மாநகரில் தனது 5G சேவையை தொடங்கியுள்ளது VI நிறுவனம் . வரும் மே மாதத்திற்குள் வேலூர், கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த திட்டம். மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய பகுதிகளில் தற்போது 5G சேவையை வழங்கி வருகிறது VI நிறுவனம்

ஏப்ரல் 8, 2026 அன்று சென்னையில் தனது 5G சேவையை Vi தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின் 5 முக்கிய நகரங்களில் (மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னை) தனது 5G சேவையை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் மே 2026-க்குள் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களான கோவை, திருச்சி, சேலம், வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு பங்காளராகவும் (Official Communications Partner) Vi ஒப்பந்தம் செய்துள்ளது.

நவீன தொழில்நுட்பம்: இந்தச் சேவையை வழங்க நோக்கியா, எரிக்சன் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் Vi கூட்டணி அமைத்துள்ளது. சென்னையில் உள்ள Vi வாடிக்கையாளர்கள் இப்போது அதிவேக 5G இணையத்தைப் பயன்படுத்த முடியும். உங்கள் பகுதியில் 5G சிக்னல் கிடைக்கிறதா என்பதை அறிய உங்கள் மொபைல் அமைப்புகளில் (Settings) 5G நெட்வொர்க்கை ஆன் செய்து சரிபார்க்கவும்.

Related Stories: