*அரசுக்கு கிராம பெண்கள் நன்றி
நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகில் ராயபுரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலயம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முதல்வருக்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் தமிழ் நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட வளரர்ச்சிப்பணிகள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பரிந்துறையில் அரசு நிதி ஓதுக்கீடு செய்து பல்வேறு வளர்ச்சி நிறைவடைந்துள்ளது.
பல பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பாதுகாப்புக்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நீடாமங்கலம் அருகே ராயபுரத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான 15வது மான்ய நிதிக்குழுவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி பூமி பூஜை செய்து நீடாமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு 24 மணி நேரமும் இலவச பிரசவம் பார்க்கப்படும்.
மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறப்பான ரத்த பரிசோதனை ஆய்வகம், இசிஜி உள்ளிட்ட சிறப்பான முறையில் நோயாளிகள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணிகள் நலன் கருதி ராயபுரத்தில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுகிறது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்ற அமைச்சர் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் நோயாளிகள் நலன் கருதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தெரிவித்து உடனே ராயபுரத்தில் மக்கள் நலன் கருதி ராயபுரத்தில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி தற்போது பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராயபுரத்தில் வட்டார புதிய வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், பரிந்துறை செய்த அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
