இடமாற்றத்தை திரும்ப பெற்ற தேர்தல் ஆணையம்: மீண்டும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி ஆனார் டேவிட்சன் தேவாசீர்வாதம்

சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாத பணியிட மாற்றத்தை தேர்தல் ஆணையம் திரும்பபெற்றது. இதனால் டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக தொடர்வார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றியது. அவருக்கு பதில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். அவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான சந்தீப் மிட்டல் நியமனத்தை எதிர்த்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு திரும்பபெறபட்டது. இதனால் சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டிஜிபியாக செயல்படுவார் என கூறப்படுகிறது. மேலும் டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக தொடர்வார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: