உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

 

சென்னை: உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம் செய்யப்பட்டு மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், போலீஸ் கமிஷனர் அருண், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தாம்பரம், மதுரை கமிஷனர்கள், சேலம், தூத்துக்குடி கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 எஸ்பிக்களும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம் செய்யப்படுவார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின. அதேபோல உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய உள்துறைச் செயலாளராக இந்து அறநிலையத்துறை செயலாளர் டாக்டர் மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் சென்னையில் பணியாற்றும் சில போலீஸ் அதிகாரிகளை மாற்றவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: