கால்வாயில் மணல் லாரி பாய்ந்து விபத்து

*டிரைவர் படுகாயம்

திருமலை: கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கால்வாயில் மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் செப்ரோலுவின் புறநகர்ப் பகுதியில் உள்ள கொம்மமூர் கால்வாய்ப் பாலம் அருகே நேற்று மணல் ஏற்றிக்கொண்டு லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் பாதுகாப்புச் சுவரில் பலமாக மோதி நேராகக் கால்வாயில் விழுந்தது.

விபத்தின் தாக்கத்தால் வாகனத்தின் முன்பகுதி முற்றிலுமாக நசுங்கியது. இதனால் லாரியின் டிரைவர் முன்புற கேபினுக்குள் சிக்கி கொண்டார். இதனை கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் உள்ளூர் மக்களும் உடனடியாகச் செயல்பட்டு பாலத்தின் கீழ் சென்று அவரை வெளியே கொண்டு வந்தனர்.

மயக்க நிலையில் இருந்த டிரைவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவல் கிடைத்ததும், செப்ரோலு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

கால்வாயில் விழுந்த டிப்பர் லாரியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, அதிவேகமே விபத்திற்குக் காரணம் என போலீசார் முடிவு செய்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: